• Sat. Nov 14th, 2026

24×7 Live News

Apdin News

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு கேக் ஊட்டிய தமிழக முதலமைச்சர் விஜய்!

Byadmin

Nov 14, 2026


தமிழகத்தில் சென்னை கொளத்தூரில் உள்ள அரசாங்க அனுசரணையுடன் இயங்கும் பாடசாலையில் பயிலும் மாணவ மாணவியருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கேக் ஊட்டியும் ,வாழ்த்து அட்டை வழங்கியும் குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கேக் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் விஜய் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

இதற்காக சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் அவர் பங்கு பற்றி மாணவ மாணவிகளுக்கு கேக் ஊட்டினார். அத்துடன் வாழ்த்து அட்டையையும் வழங்கினார். இந்நிகழ்வில் தமிழக முதலமைச்சர் விஜயுடன் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஸ்ரீநாத், ஜெகதீஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலையில் பயிலும் மாணவ மாணவியர்கள் சிலர் தேச தலைவர்களைப் போல் வேடம் அணிந்து வருகை தந்திருந்தனர். அவர்களிடம் முதலமைச்சர் விஜய் பேசி மகிழ்ந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த திட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து அரசாங்க அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளில் அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் பிள்ளைகளுக்கு கேக் வழங்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

பொதுவாக இந்தியாவில் நவம்பர் 14 ஆம் திகதி தான் ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் நடப்பாண்டில் நவம்பர் 14ஆம் திகதி விடுமுறை நாள் என்பதால்… ஒரு நாள் முன்னதாக இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள மாணவ மாணவியர்களுக்கு மதியம் சத்துணவுடன் ‘கேக்’ கும் வழங்கப்படுகிறது.

கலாச்சாரம் காண்

தமிழகத்தில் முதன்முறையாக குழந்தைகள் தினத்தை ஒட்டி அரசின் சார்பில் மாணவ மாணவியர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

இதனிடையே இந்தத் திட்டம் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள அம்பாசமுத்திரம் தொகுதியில் விஜய் பங்கு பற்றி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இறுதி நேரத்தில் இத்திட்டம் சென்னை  கொளத்தூர் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது என்பதும், அந்நிகழ்வில் பங்கு பற்றிய பிறகு வெற்றி பெற்ற பெரம்பூர் தொகுதி அலுவலகத்திற்குச் சென்று பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுகளை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By admin