• Sat. Nov 14th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவில் விமானங்களை இயக்க 4 மணி நேரம் நீடித்த தடை – என்ன நடந்தது?

Byadmin

Nov 14, 2026


'அமெரிக்காவில் அனைத்து விமானங்களையும் தரையிறக்க உத்தரவு' - 4 மணி நேரம் நீடித்த தடையில் என்ன நடந்தது?

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாடு முழுவதும் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், சுமார் நான்கு மணி நேரத்துக்குப் பிறகு, விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சீன் டஃபி, வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.

“எங்களுடைய கட்டுப்பாட்டு மையங்களும், விமானப் போக்குவரத்து முனையக் கட்டுப்பாட்டு அமைப்புகளும் (trachons) தற்போது செயல்பாட்டில் உள்ளன,” என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

மேலும் அவர், “நிகழ்ந்த குளறுபடிகளைச் சரிசெய்து, நிலைமையைச் சீர்செய்ய சிறிது காலம் தேவைப்படும்.” என்றும் தெரிவித்தார்.

By admin