• Sat. Nov 14th, 2026

24×7 Live News

Apdin News

IND vs NZ: கோலி, ரோகித் இருந்தும் இந்தியா நியூசிலாந்திடம் படுதோல்வி ஏன்?

Byadmin

Nov 14, 2026


இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே இந்திய பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி ஆட்டமிழக்கச் செய்தார் (கோப்புப் புகைப்படம்)

படக்குறிப்பு, இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே இந்திய பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி ஆட்டமிழக்கச் செய்தார் (கோப்புப் புகைப்படம்)

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ரன் வித்தியாசத்தில் தனது இரண்டாவது மிகப்பெரிய தோல்வியை இந்திய அணி சந்தித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) மவுண்ட் மாங்கனுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில், இந்தியாவை 244 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது.

334 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 26.4 ஓவர்களில் 89 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தத் தோல்விக்குப் பிறகும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணியின் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா, விராட் கோலி, அணித் தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஹென்றி வீழ்த்தினார்.

போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், அணியின் பேட்டிங் செயல்பாடு கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

By admin