• Sat. Nov 14th, 2026

24×7 Live News

Apdin News

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவுப்பொருள் அல்லது மருந்து காலாவதியாகி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

Byadmin

Nov 14, 2026


ஆன்லைன் ஆர்டர், காலாவதி தேதி, நுகர்வோர் உரிமை, இழப்பீடு, சட்டம்

படக்குறிப்பு, ஜெப்டோ நிறுவனத்திடமிருந்து வரப்பெற்ற கடலை மாவுப் பாக்கெட் காலாவதியானதாகக் கூறி, வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார்

    • எழுதியவர், ஷூப் ராணா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ஆன்லைனில் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்யும்போது, பெரும்பாலானோர் அவை எவ்வளவு விரைவாக வந்து சேரும் என்பதில்தான் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், பொருட்கள் டெலிவரி செய்யப்பட்ட பிறகு, அவற்றின் மீது அச்சிடப்பட்டுள்ள காலாவதி தேதியை எத்தனை பேர் சரிபார்க்கிறார்கள்?

‘ஸெப்டோ’ (Zepto) என்ற துரித வர்த்தகத் தளத்துடன் தொடர்புடைய சமீபத்திய சம்பவம், இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது.

காலாவதியான கடலை மாவுப் பாக்கெட் ஒன்று தங்களுக்கு டெலிவரி செய்யப்பட்டதாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தகவலின்படி, சமூக ஊடகத் தளமான ‘எக்ஸ்’-இல் வாடிக்கையாளர் வெளியிட்ட புகாரில், கடலை மாவுப் பாக்கெட்டில் ‘பயன்படுத்த வேண்டிய கடைசி தேதி’ (காலாவதி தேதி) 12-09-2026 எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு ஸெப்டோ நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ள இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

By admin