சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்கள்:
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ரேடாரை தாக்கியதாக ஈரான் கூறியதை தொடர்ந்து, ஈரானிய டிரோன்கள் இடைமறிக்கப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது. பஹ்ரைனை நோக்கி சென்றுகொண்டிருந்த இரண்டு ஈரானிய தாக்குதல் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் வெள்ளிக்கிழமை கூறியது.
இதன் மூலம், அந்நாட்டில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பை தாக்கியதாக ஈரான் கூறிய கூற்றை அது மறுத்துள்ளது. இப்பகுதியை கண்காணிக்கும் அமெரிக்க கட்டளை மையமான சென்ட்காம் (CENTCOM), காயங்களோ சேதமோ ஏற்படவில்லை என்று கூறியுள்ளது.
தெற்கு ஈரானிய துறைமுகமான சிரிக்கில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு கம்பத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை தொடர்ந்து ரேடார் அமைப்பின் மீதான தாக்குதல் நடந்ததாக புரட்சிகர காவல் படையின் அறிக்கை கூறியதாக ஈரானின் அதிகாரப்பூர்வ ஐ.ஆர்.என்.ஏ. செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.