பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், மேட்லைன் ஹால்பெர்ட்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில், 11 மாத குழந்தை ஒன்று கூண்டில் அடைக்கப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குழந்தையின் தந்தையே இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லெக்சிங்டன் கவுண்டி ஷெரிப் துறை தகவலின்படி, கோவா ஷார்ப் என்ற அந்தக் குழந்தை திங்கள்கிழமை முதல் காணாமல் போயிருந்தது. குழந்தையை அதன் தந்தையான 25 வயது மைக்கேல் கோமர் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார். திங்கள்கிழமை மாலை திருட்டு வழக்கில் மைக்கேல் கோமர் கைது செய்யப்பட்டார். ஆனால், அப்போது குழந்தை அவருடன் இல்லை.
செவ்வாய்க்கிழமை, குழந்தையின் தந்தை வீட்டுக்கு அருகே அந்தக் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதாக லெக்சிங்டன் கவுண்டி ஷெரிப் ஜே கூன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கூண்டுக்குள் அடைக்கப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டிருந்த குழந்தை, மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டது. சுமார் 24 மணிநேரமாக குழந்தை அந்த இடத்தில் இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை முழுமையாகக் குணமடைந்துவிடும் என நம்புவதாக ஷெரிப் கூன் தெரிவித்தார்.