• Fri. Nov 13th, 2026

24×7 Live News

Apdin News

விஜய் ஆட்சியில் முதல் ஆறு மாதங்களில் ஏற்பட்ட 6 முக்கிய சர்ச்சைகள் எவை?

Byadmin

Nov 13, 2026


விஜய் ஆட்சியில் முதல் ஆறு மாதங்களில் ஏற்பட்ட 6 முக்கிய சர்ச்சைகள்

    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் அவரது அரசு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நிர்வாக அனுபவம், அரசு நியமனங்கள், முக்கியத் திட்டங்கள் தொடர்பான முடிவுகள் எனப் பல்வேறு விவகாரங்களில் அரசின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகின. பரந்தூர் விமான நிலையத் திட்டம், முதலமைச்சருக்கு நெருக்கமானவர்களின் அரசு நியமனங்கள், குதிரைப் பேரக் குற்றச்சாட்டு எனத் தொடங்கிய சர்ச்சைகள், மின்சாரக் கொள்முதல் மற்றும் புத்தகக் கொள்முதல் விவகாரங்கள் வரை நீண்டன.

ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல்களையும் தவெக எதிர்கொண்டது. அதிமுகவைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவற்றில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இந்தக் கட்சி மாற்றங்கள் குதிரைப் பேரம் தொடர்பான அரசியல் விவாதங்களையும் தீவிரப்படுத்தின.

மறுபுறம், தேர்தல் பிரசாரத்தின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற விமர்சனமும் உண்டு. அரசின் நிர்வாகத் திறன், முடிவெடுக்கும் அணுகுமுறை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள முன்னேற்றம் ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் கேள்விக்குள்ளாக்குகின்றன. விஜய் ஆட்சியில் முதல் 6 மாதங்களில் ஏற்பட்ட 6 முக்கிய சர்ச்சைகள் என்ன?

1. பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து

விஜய் ஆட்சியில் முதல் ஆறு மாதங்களில் ஏற்பட்ட 6 முக்கிய சர்ச்சைகள்

படக்குறிப்பு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மக்களின் வாழ்விடங்களையும் பாதுகாப்பதே இந்த முடிவுக்கான காரணம் என்று விஜய் விளக்கமளித்தார்.

சென்னைக்கான இரண்டாவது விமான நிலையமாக, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முந்தைய திமுக அரசு முன்னெடுத்தது. இதற்காகப் பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. விவசாய நிலங்களும் நீர்நிலைகளும் பாதிக்கப்படும் என்றும், தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்றும் கூறி ஒரு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த விவகாரத்தில், 2025 ஜனவரி 20ஆம் தேதி ஏகனாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களைத் தவெக தலைவர் விஜய் சந்தித்தார். அப்போது, தவெக ஆட்சிக்கு வந்தால் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று அவர் உறுதியளித்திருந்தார். அதன்படி, 2026 ஆகஸ்ட் 24ஆம் தேதி சட்டப்பேரவையில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடும் முடிவை அவர் அறிவித்தார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மக்களின் வாழ்விடங்களையும் பாதுகாப்பதே இந்த முடிவுக்கான காரணம் என்று விஜய் விளக்கமளித்தார்.

By admin