• Fri. Nov 13th, 2026

24×7 Live News

Apdin News

IND vs NZ இந்தியா 89 ரன்னுக்கு ஆல்அவுட்: முதல் ஓவரிலேயே 3 விக்கெட் இழந்து ஆட்டத்தை கோட்டை விட்டது எப்படி?

Byadmin

Nov 13, 2026


இந்தியா, நியூசிலாந்து, ஒருநாள் போட்டி, படுதோல்வி, ஆல் அவுட், மேட் ஹென்றி, கோலி, ரோஹித், ஸ்ரேயஸ் ஐயர்

படக்குறிப்பு, விராட் கோலி

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

ஆட்டம் நடைபெற்ற நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் வெயில் அதிகமிருந்ததால் டாஸ் வென்ற இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்த நிலையில், இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது.

கில்லுக்குப் பதிலாக தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட்டும், குல்தீப் யாதவுக்குப் பதிலாக அன்ஷுல் கம்போஜும் அணியில் சேர்க்கப்பட்டனர். அனுபவ வீரர் கே.எல்.ராகுலுக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷான் இடம்பிடித்தார்.

கடந்த மூன்று போட்டிகளில் விளையாடாத முகமது சிராஜுக்கு இம்முறையும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆகிப் நபி வீசிய இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே இரண்டு கேட்ச் வாய்ப்புகளை இந்திய வீரர்கள் கோட்டை விட்டனர். அடுத்தடுத்த பந்துகளில் யங் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை ரோஹித் சர்மாவும் இஷான் கிஷானும் தவறவிட்டனர்.

வில் யங் அபார சதம்

இந்தியா, நியூசிலாந்து, ஒருநாள் போட்டி, படுதோல்வி, ஆல் அவுட், மேட் ஹென்றி, கோலி, ரோஹித், ஸ்ரேயஸ் ஐயர்

படக்குறிப்பு, சதமடித்த வில் யங்

தொடக்க வீரர் டிம் சைஃபர்ட் 48 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து குர்னூர் பிராரின் பவுன்சர் பொறியில் வீழ்ந்தார். சைஃபர்ட் ஆட்டமிழந்ததும் அவரை நோக்கிச் சென்ற பிரார் ஆக்ரோஷமான வார்த்தைகளை உதிர்த்தார். அவரை சமாதானம் செய்த கோலி, நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுத்தார்.

By admin