• Mon. Sep 28th, 2026

24×7 Live News

Apdin News

கேமிங் துறையில் இந்த முன்னாள் ஆசிரியருக்கு இரு மடங்கு வருமானம் கிடைப்பது எப்படி?

Byadmin

Sep 28, 2026


ஜார்வ்ஸ் டாஸ்கர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது ஆசிரியர் பணியை விட்டு விலகினார்.

படக்குறிப்பு, ஜார்வ்ஸ் டாஸ்கர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது ஆசிரியர் பணியை விட்டு விலகினார்.

2019-ஆம் ஆண்டு, நீண்டகால உடல்நலப் பிரச்னை காரணமாக, ஜார்வ்ஸ் டாஸ்கர் தனது 28வது வயதிலேயே ஆசிரியர் பணியை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று அவர் கேமிங் துறைக்கான தகவல் தொடர்பு மற்றும் சந்தைப்படுத்தல் சேவைகளை வழங்கும் ஜார்வ்ஸ் இண்டி இன்சைட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது, ஆசிரியராக இருந்தபோது பெற்ற ஆண்டு வருமானத்தை விட இரு மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்.

சமீபத்தில் சுயாதீன கேம் உருவாக்குநர்களையும் ஸ்டுடியோக்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் பிரிட்டனில் உள்ள சஃபோக் பல்கலைக்கழகத்தின் இ-ஸ்போர்ட்ஸ் மையத்துக்கு வந்திருந்தார்

“இப்போது நான் சம்பாதிப்பதை ஆசிரியர் பணியில் சம்பாதிக்க எனக்கு சுமார் 20 ஆண்டுகள் எடுத்திருக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்,” என்று அவர் கூறினார்.

ஆசிரியர் பணியை விட்டு வெளியேறிய பிறகு, ஆரம்பத்தில் பிளேஸ்டேஷனின் யூடியூப் சேனலுக்காக தன்னார்வலராகப் பணியாற்றத் தொடங்கியதாக டாஸ்கர் கூறினார். ஆனால், ஆசிரியர் பணிக்கும் கேமிங் துறைக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

By admin