• Wed. Oct 28th, 2026

24×7 Live News

Apdin News

கேரளம்: சிறுவன் ஓட்டிய கார் மோதி ஒருவர் உயிரிழந்த வழக்கில் நீதிபதி மீது வழக்குப்பதிவு – என்ன நடந்தது?

Byadmin

Oct 28, 2026


கேரளா, கார் விபத்து, காவல்துறை, மோட்டார் வாகனச்சட்டம்
படக்குறிப்பு, விபத்துக்குள்ளான காரும், ஸ்கூட்டியும்

கேரளத்தில் கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்த வழக்கில், காரை ஓட்டிய சிறுவனின் தந்தை மாவட்ட கூடுதல் நீதிபதி என்பதால், சிறுவனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்ற கேரள காவல்துறை, மோட்டார் வாகனச்சட்டப்படி சிறுவனின் தந்தையான நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

குற்றம் செய்தவர்கள், செல்வமும் செல்வாக்கும் படைத்தவர்களாக இருப்பதால் தங்களுக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமாக இருப்பதாக, இறந்தவரின் மகள் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து விவகாரத்தில் நீதி கிடைக்கும்வரை போராடுவோம் என்று கேரள ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத்தலைவர் சிந்தா ஜெரோம் பிபிசியிடம் கூறினார். தவறிழைத்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் முதலில் காவல்துறையினர் தவறு செய்ததை சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டுள்ள கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, ”இதுபோன்ற கொலைக்கு இணையான சம்பவங்களில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை.” என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக கொச்சி சேராநல்லூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



By admin