தீர்மானம் நிறைவேற்றம்:
“இந்த மசோதாவின்படி, கேரள மாநிலம் ‘கேரளம்’ என அழைக்கப்படும். எனவே, கேரளா என்பதை ‘கேரளம்’ என பெயர் மாற்றும் திட்டம் உள்ளது,” என்று அவர் கூறினார். பெயர் மாற்றம் தொடர்பாக மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, கேரள அரசு 2024 ஜூன் மாதம் மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தது.
அதனைத் தொடர்ந்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அந்த மசோதாவை மாநில சட்டமன்றத்தின் கருத்துக்களுக்காக பரிந்துரைத்தார். அதனை தொடர்ந்து, சட்டமன்றம் அந்த மசோதாவை ஏற்றுக்கொண்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
கேரள (பெயர் மாற்ற) சட்டம், அரசியலமைப்பு சட்டம் மற்றும் அதன் விளைவான விதிகளில் தேவையான திருத்தங்களை செய்து, மாநிலத்தின் பெயரை மாற்றுகிறது.