• Wed. Aug 26th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா இரான் மீது விதித்த ‘இதுவரை இல்லாத கடுமையான தடைகள்’- இந்தியாவுக்கு என்ன தாக்கம்?

Byadmin

Aug 26, 2026


தெஹ்ரானில் உள்ள ஒரு சந்தையில் பொருட்கள் வாங்கும் மக்கள். அமெரிக்கத் தடைகளின் விளைவாக இரான் கடினமான பொருளாதார சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, தெஹ்ரானில் உள்ள ஒரு சந்தையில் பொருட்கள் வாங்கும் மக்கள். அமெரிக்கத் தடைகளின் விளைவாக இரான் கடினமான பொருளாதார சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், இரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் புதிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் இதை “முன்னெப்போதும் இல்லாதது” என வர்ணித்துள்ளார்.

இதன் நோக்கம், “வெளிநாடுகளில் இரானுக்குள்ள பொருளாதார வழிகளை முடக்குவது” என்று அவர் கூறினார்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்கா இரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேலும் கடுமையாக்கியுள்ளது. பல டஜன் நபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இரானுடன் தொடர்ந்து வர்த்தகத் தொடர்பில் உள்ள வெளிநாட்டு வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது அழுத்தம் அதிகரிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இரானின் வர்த்தகம் மற்றும் வருமானத்திற்கு உதவுவதாக அமெரிக்கா கருதும் சில செயல்பாடுகளை நிறுத்த காலக்கெடுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, இந்த புதிய அமெரிக்கத் தடைகள் இரானுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி, தேயிலை மற்றும் மருந்துகளின் வர்த்தகத்தை பாதிக்கக்கூடும்.

By admin