• Wed. Oct 21st, 2026

24×7 Live News

Apdin News

கைலி ஜென்னர்: 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆடையை இவர் அணிந்ததால் என்ன சர்ச்சை?

Byadmin

Oct 21, 2026


கைலி ஜென்னர்

படக்குறிப்பு, ஃபேன்டஸி உள்ளாடை வரலாற்று ரீதியாக சூப்பர்மாடல்களால் அணியப்பட்டு வருகிறது.

ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரமான கைலி ஜென்னர், 50 மில்லியன் டாலர் (சுமார் 475 கோடி ரூபாய்) மதிப்புள்ள உள்ளாடையை அணிந்து விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோவில் முதல்முறையாகப் பங்கேற்றது கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

அழகுசாதனப் பொருட்கள் துறையில் பிரபலமான கைலி ஜென்னர், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாடை நிறுவனமான விக்டோரியாஸ் சீக்ரெட்டின் வருடாந்திர ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்டு பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.

அப்போது அவர் அணிந்திருந்த புகழ்பெற்ற ‘ஃபேன்டஸி பிரா’ 18 காரட் தங்கம் மற்றும் 4,410 வைரங்களால் தயாரிக்கப்பட்டதாக அதன் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக இந்த ஃபேஷன் ஷோவின் முக்கிய அம்சமாக ஃபேன்டஸி பிரா இருந்து வருகிறது. அதை அணிவது, அதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாடலுக்குக் கிடைக்கும் கௌரவமாகவும், அவரது வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணமாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது.

‘தி கர்தாஷியன்ஸ்’ நிகழ்ச்சியின் நட்சத்திரமான 29 வயது கைலி ஜென்னர், இந்த உள்ளாடையை அணிவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது சில ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்தது. அதே நேரத்தில், அனுபவம் வாய்ந்த சூப்பர் மாடல் ஒருவருக்கு இந்த வாய்ப்பை வழங்காததற்காகப் பலரும் அந்த நிறுவனத்தை விமர்சித்தனர்.

By admin