• Mon. Jul 6th, 2026

24×7 Live News

Apdin News

கொட்டாவி விடுகிறீர்களா? பகலில் அதிகம் தூக்கம் வருவது ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம்

Byadmin

Jul 6, 2026


பகலில் எப்போதும் தூக்கமாக இருக்கிறதா? அடிக்கடி கொட்டாவி வருகிறதா? மறைந்திருக்கும் ஆபத்து

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஓம்கார் கரம்பெல்கர்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

காலை எழுந்த பிறகும் போதுமான தூக்கம் கிடைக்காதது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். பின்னர் பகலில் சிறிது ஓய்வு நேரம் கிடைத்தாலே தூக்கம் வருவது போலத் தோன்றலாம் அல்லது கண்கள் தானாக மூடத் தொடங்கலாம். ஆனால், பகல் நேரத்தில் தொடர்ந்து தூக்கம் வருவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல.

அடிக்கடி கண் சொருகுதல், வேலை செய்யும்போதோ அல்லது வாகனம் ஓட்டும்போதோ தூக்கம் வருதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அதற்குப் பின்னால் தீவிரமான உடல்நலக் காரணங்கள் இருக்கக்கூடும்.

அதிகப்படியான பகல் நேர தூக்கம் (EDS) என்பது வெறும் சோம்பேறித்தனத்தின் அறிகுறி மட்டுமல்ல. உடலில் உள்ள பல்வேறு கோளாறுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

வாழ்க்கைமுறை மாற்றங்கள், அதிக திரைப் பயன்பாடு, மனஅழுத்தம், போதிய தூக்கமின்மை மற்றும் மாறி மாறி வேலை செய்யும் ஷிப்ட் முறைகள் போன்ற காரணங்களால் இந்தப் பிரச்னை அதிகரித்து வருகிறது.

இது வேலைத்திறனை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், விபத்துகளின் அபாயத்தை அதிகரிக்கலாம். மனநலத்தையும் பாதித்து, நீண்டகால நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் உயர்த்தக்கூடும். பலர் இதை “நான் சோர்வாக இருக்கிறேன்” என்று கூறி அலட்சியப்படுத்திவிடுகின்றனர். ஆனால், தொடர்ந்து தூக்கம் வருவது ஒரு முக்கியமான உடல்நல எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.

By admin