• Fri. Jul 17th, 2026

24×7 Live News

Apdin News

கொலோபஸ் காங்கோஎன்சிஸ்: காட்டில் பதுங்கியிருந்த ஆரஞ்சு உதடு குரங்கு – 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த ரகசியம்

Byadmin

Jul 17, 2026


காட்டில் 'மறைந்திருந்த' ஆரஞ்சு நிற உதடுகள் கொண்ட புதிய குரங்கு இனம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், Junior Amboko

    • எழுதியவர், விக்டோரியா கில்
    • பதவி, அறிவியல் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கருமையான முகமும் இளஞ்சிவப்பு-ஆரஞ்சு நிற உதடுகளும் கொண்ட ஒரு குரங்கு இனத்தை விஞ்ஞானிகள் புதிய உயிரினமாக உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தக் குரங்கு, காங்கோ ஜனநாயகக் குடியரசின் காடுகளில் வாழ்கிறது.

அடர்ந்த வெப்பமண்டலக் காடுகளால் சூழப்பட்ட அந்நாட்டின் மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள லோமாமி தேசியப் பூங்காவில், உயரமான மரங்களின் உச்சியில் மறைந்திருந்த இந்த குரங்கு முதன்முறையாகக் கண்டறியப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டது.

அங்கு பணியாற்றிய வனவிலங்கு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், இந்த வித்தியாசமான தோற்றமுடைய விலங்கை 2008-ஆம் ஆண்டிலேயே பார்த்ததாக தெரிவித்திருந்தனர். ஆனால் அப்போது அவர்கள் பெற்றது தெளிவில்லாத ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே.

அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தக் குரங்கு காணப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு அதைத் தேடி ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் மூலம், இது இதுவரை அறிவியலுக்கு அறியப்படாத புதிய குரங்கு இனம் என்பது தெரியவந்தது.

கடந்த 75 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தாவது புதிய குரங்கு இனம் இதுவாகும்.

By admin