• Fri. Jun 12th, 2026

24×7 Live News

Apdin News

“கொல்லப்பட்ட இந்திய மாலுமிகள், மன்னிப்பு கேட்காத அமெரிக்கா” – மோதி அரசின் அணுகுமுறை குறித்து எழும் கேள்விகள்

Byadmin

Jun 12, 2026


இரானின் எண்ணெய் ஏற்றுமதி வருமானத்தைத் தடுத்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்படிக்கைக்கு அதனை நிர்ப்பந்திக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தி வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா குவாட் குழுவில் அங்கம் வகித்தாலும், அமெரிக்காவின் நிலைப்பாடு மாறாமல் உள்ளது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

மேற்கு ஆசியாவில் இரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் முற்றுகை நடவடிக்கையின் போது மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் நடவடிக்கையில், இந்தியர்களின் உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்ட முதல் சம்பவம் இதுவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இரானின் எண்ணெய் ஏற்றுமதி வருமானத்தைத் தடுத்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்படிக்கைக்கு அதனை நிர்ப்பந்திக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த வாரம், ஓமன் வளைகுடாவில் இந்தியப் பணியாளர்களைக் கொண்ட மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தூதரக பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும்.

By admin