• Fri. Jun 12th, 2026

24×7 Live News

Apdin News

‘தனிமனித ஒழுக்கம்' குறித்து முதலில் உங்கள் கட்சியினருக்கு சொல்லுங்கள்..!- கனிமொழி எம்.பி

Byadmin

Jun 12, 2026


சினிமா பாணியில் பெயரிட்ட சிறப்புப்படையை அண்மையில் தொடங்கி வைத்து, ‘தனிமனித ஒழுக்கம்’ குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை கூறிய முதலமைச்சர் விஜய், முதலில் தனது கட்சியினருக்கு அதை சொல்ல வேண்டும் என்று சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர், தவெக நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர், தவெக நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

சில தினங்களுக்கு முன், திருவைகுண்டத்தில் தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சியினர் குற்றவாளிகளை காப்பாற்றப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

சினிமா பாணியில் பெயரிட்ட சிறப்புப்படையை அண்மையில் தொடங்கி வைத்து, ‘தனிமனித ஒழுக்கம்’ குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை கூறிய முதலமைச்சர் விஜய் அவர்கள், முதலில் தனது கட்சியினருக்கு அதை சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

By admin