• Wed. Apr 29th, 2026

24×7 Live News

Apdin News

கோடைக் காலங்களில் வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்தால் என்ன செய்ய வேண்டும்?

Byadmin

Apr 29, 2026


இந்தியாவில் சுமார் 362 வகையான பாம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன ( கோப்புப்படம் )

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் சுமார் 362 வகையான பாம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன ( கோப்புப்படம் )

‘பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்’ என்பது பெரியவர்கள் சொல்லும் பழமொழி. இன்றளவும் இந்த வகை அச்ச உணர்வு நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும். விஷமுள்ள பாம்பு விஷமற்ற பாம்பு என்ற எந்த வேறுபாடுகளும் இன்றி பாம்பைக் கண்டாலே அச்சம் கொள்வதுதான் இயல்பான மனிதர்களின் மனநிலை.

அந்த வகையில் பாம்பைக் கண்டால் தூரம் செல்லும் இயல்பான குணம் படைத்த நம்மை தேடி பாம்பு வந்தால் எப்படி இருக்கும்.

ஆம், அதுபோன்ற ஒரு காலம்தான் இந்த கோடைக் காலம், பாம்புகள் உணவுக்காகவும் உடல் வெப்பத்தை தணிப்பதற்காகவும் பெரும்பாலும் நீர்நிலைகளை சுற்றியோ, வயல்வெளிகள் போன்ற பகுதிகளில் உலாவும் ஒரு ஊர்வன வகையை சார்ந்த விலங்கு.

அவ்வாறு இருக்கும் பாம்புகள் கோடைக்காலங்களில் குடியிருப்புகளை நோக்கி வருவதற்கான காரணங்கள் என்ன? இதில் விலங்கியல் நிபுணர்களின் கருத்துகள் என்ன? பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள பாம்பு இனங்கள் எண்ணிக்கை

கோடைக் காலங்களில் குடியிருப்புகளை நோக்கி வரும் பாம்புகள் எவை? வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கண்ணாடி விரியன்

இந்தியாவில் சுமார் 362 வகையான பாம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சொல்லும் விலங்குகள் பாதுகாப்பு குழு அவற்றில் சுமார் 134 வகையான பாம்புகள் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் காணப்படுவதாக சொல்கிறது.

By admin