• Wed. Apr 29th, 2026

24×7 Live News

Apdin News

தூக்க மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் என்ன ஆபத்து?

Byadmin

Apr 29, 2026


தூக்க மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் என்ன ஆபத்து?

பட மூலாதாரம், Getty Images

சமய் ரெய்னா என்ற நகைச்சுவைக் கலைஞர் தனது ‘ஸ்டில் அலைவ்’ நிகழ்ச்சியில் தனது தனிப்பட்ட கதையைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், “நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததால் தூங்க முடியாமல் தவித்தேன். என் மருத்துவர் 3 மில்லிகிராம் மெலடோனின் எடுத்துக்கொள்ளுமாறு கூறினார்.

ஆனால், அது பலனளிக்கவில்லை. அதனால் நான் 30 மில்லிகிராமுக்கும் அதிகமாக எடுத்துக்கொண்டேன். அதன் பிறகு, நான் தொடர்ந்து 16 மணிநேரம் தூங்கினேன்,” என்று கூறினார். இந்த வீடியோ யூட்யூபில் 22 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

இதுவொரு நகைச்சுவை நிகழ்ச்சியில் கூறப்பட்டு இருந்தாலும், இன்றைய மக்களிடையே வளர்ந்து வரும் ஓர் உண்மையான பழக்கத்தை இது எடுத்துக் காட்டுகிறது. பலர் இப்போது மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல், மெலடோனின் மாத்திரைகள், மெக்னீசியம் ஸ்லீப் ஸ்ட்ரிப்ஸ் போன்ற தூக்கம் தொடர்பான மருந்துகளைத் தாங்களாகவே பயன்படுத்துகின்றனர்.

இவற்றைக் கடைகளிலும் ஆன்லைனிலும் எளிதாக வாங்கலாம், மேலும் அவை பொதுவாக மலிவானவை. அவை “நல்வாழ்வு சப்ளிமென்டுகள்” அல்லது “ஊட்டச்சத்து மருந்துகள்” என்று விற்கப்படுவதால், அவற்றின் விற்பனையைக் கட்டுப்படுத்தும் கடுமையான விதிகளும் அதிகமாக இல்லை.

அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகத்தின்படி, ஊட்டச்சத்து மருந்துகள் என்பவை உணவு மூலங்களில் இருந்து தயாரிக்கப்படும் தயாரிப்புகளாகும். அவை நோய்களைத் தடுக்க அல்லது சிகிச்சையளிக்க உதவுவது உள்பட, உடல்நலப் பலன்களைத் தருகின்றன.

By admin