3
கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலை இன்று சனிக்கிழமை (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 17 ரூபாயால் உயர்த்தப்பட்டதை அடுத்து, பராட்டா மற்றும் முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலைகளை 5 ரூபாயால் உயர்த்த அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, இடியாப்பம் ஒன்றின் விலை 1 ரூபாவினாலும், ஆப்பம் ஒன்றின் விலை 2 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.
பிரீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயா்த்தியமையினாலேயே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கோதுமை மா விலை உயர்வு குறித்து கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளது.
பாண் உள்ளிட்ட ஏனைய வெேகப் பொருட்களின் விலைகளை உயர்த்துவது தொடர்பில் அன்றைய தினம் கூடி தீர்மானம் எடுக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.