• Sun. Aug 30th, 2026

24×7 Live News

Apdin News

சிவ ராஜ்குாமர் – அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அசத்தல் அப்டேட்

Byadmin

Aug 30, 2026


நடிகர் சிவ ராஜ்குமார் மற்றும் இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவிந்த் நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“டூரிஸ்ட் ஃபேமலி” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். இந்தப் படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் “வித் லவ்” திரைப்படத்தின் மூலம் கதநாயகனாக அறிமுகமானார்.

படப்பிடிப்பு நிறைவு:

இந்த நிலையில், டிராமா கம்பெனி தயாரிப்பில் உருவாகும் படத்தில் அபிஷன் ஜீவிந்த் நடிக்கிறார். இந்தப் படத்தில் சிவ ராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த், ஷிவானி நாகராம், யோகலட்சுமி, கானா வினோத் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

பிரகதீஷ் பிரபு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் படத்தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் தள பதிவு:

இது குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை விடியோ வெளியிட்டு, “படப்பிடிப்பு நிறைவு. டாக்டர் சிவராஜ்குமார் X அபிஷன் ஜீவிந்த்- டிராமா கம்பெனி புரொடக்ஷன் நம்பர் 1.

படப்பிடிப்புத் தளத்தில் நாம் இணைந்து உருவாக்கிய தருணங்களுக்கும், மனிதர்களுக்கும், மாயாஜாலத்திற்கும். மகிழ்ச்சி, நட்பு, அன்பு, சிரிப்பு, அயராத உழைப்பு மற்றும் நாம் என்றென்றும் போற்றும் நினைவுகள் நிறைந்த ஒரு பயணம்

ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு விரைவில்,” என குறிப்பிட்டுள்ளது.

By admin