2400 பேர் மாயம்:
நேபாள-திபெத் எல்லைக்கு அருகே பனிப்பாறை சரிவு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பனி-பாறை சரிவு காரணமாக, தண்ணீர், சேறு மற்றும் குப்பைகள் பெருக்கெடுத்து ஓடின. இது மத்திய நேபாளம் வழியாக சென்று நகரங்கள் மற்றும் கிராமங்களை அழித்ததுடன், முக்கிய உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தியது மற்றும் நீர்மின் நிலையங்களையும் அடித்து சென்றது.
நேபாள காவல்துறையின் அறிக்கையின்படி, ‘போட்டே கோஷி’ ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் இதுவரை 675 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சித்வான் மாவட்டத்தில் 246 உடல்களும், கிழக்கு நவல்ப்பராசியில் 165 உடல்களும், மேற்கு நவல்ப்பராசியில் 63 உடல்களும், கோர்காவில் 57 உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதேபோல, தாடிங் மாவட்டத்தில் 45 உடல்களும், நுவாகோட்டில் 51 உடல்களும், தனஹுவில் 35 உடல்களும், ரசுவா மாவட்டத்தில் 13 உடல்களும் மீட்கப்பட்டன. சனிக்கிழமை நிலவரப்படி 2,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்தனர்.