றாப் இசைக் கலைஞர், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக ஆளுமை திறன் படைத்த ஹிப் ஹொப் தமிழா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கலைவாணியே..’ எனும் புதிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஹிப் ஹொப் தமிழா இயக்கத்தில் உருவாகி வரும் ‘மீசைய முறுக்கு 2 ‘ திரைப்படத்தில் ஹிப் ஹொப் தமிழா, கெட்டிகா சர்மா, சைத்ரா ஜெ. ஆச்சார், ரம்யா ரங்கநாதன் பாபா பாஸ்கர் ,ஹர்ஷத் கான், நாசர் , கருணாஸ் உள்ளிட்ட படர் நடித்திருக்கிறார்கள்.
பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார்.
கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அவ்னி மூவிஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏசிஎஸ் அருண்குமார் மற்றும் குஷ்பூ சுந்தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கலைவாணியே நீ கலங்காதடி கடல் தாண்டி உனக்காய் வருவேனடி..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது இந்த பாடலை பாடலாசிரியர்கள் ஹிப் ஹாப் தமிழா எழுத, பின்னணி பாடகர்கள் ஹிப் ஹாப் தமிழா -சத்ய பிரகாஷ்- கௌசிக் கிருஷ்ணா ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள்.
மெலோடியாக உருவாகி இருக்கும் இந்தப் பாடல் ஒரு தரப்பு இசை ரசிகர்கள் ரசித்து கொண்டாடி வருகிறார்கள்.
இதன் காரணமாக இந்த பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் டிஜிட்டல் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது.
The post ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட் appeared first on Vanakkam London.