• Sun. Aug 30th, 2026

24×7 Live News

Apdin News

ஓயோ நிம்பா கபாம்பா இகுரு ருகிடி: 3 வயதில் அரியணை ஏறிய உலகின் மிக இளம் மன்னர் 34 வயதில் உயிரிழந்தார்

Byadmin

Aug 30, 2026


உகாண்டா, மன்னர் ஓயோ, நான்காம் ஒயோ நயிம்பா கபாம்பா இகுரு ருகிடி

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, மன்னர் ஓயோ மூன்று வயதில் அரியணை ஏறினார்

    • எழுதியவர், ஸ்வைபு இப்ராஹிம்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

உலகின் மிக இளம் மன்னராக அறியப்பட்ட உகாண்டாவின் மரபுவழி மன்னர் ஒருவர் தனது 34-வது வயதில் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த தகவலை பிரதமர் அறிவித்துள்ளார்.

மேற்கு உகாண்டாவில் உள்ள டோரோவின் மன்னராக நான்காம் ஓயோ நிம்பா கபாம்பா இகுரு ருகிடி, 1995-ஆம் ஆண்டு தனது தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனது 3-வது வயதில் அரியணை ஏறினார்.

மன்னர் ஓயோவின் மரணத்துக்கான காரணத்தை டோரோ ராஜ்ஜியம் வெளியிடவில்லை. ஆனால், அவர் உடல்நலக்குறைவால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் உகாண்டா அரசின் அமைச்சர் ஒருவர் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

உகாண்டா, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மற்றும் நாடாளுமன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அதேவேளையில், அந்நாட்டில் பல மரபுவழி பாரம்பரிய ராஜ்ஜியங்கள் உள்ளன. அவற்றுக்கு அரசியல் அதிகாரம் இல்லாவிட்டாலும், அவை தொடர்ந்து குறிப்பிடத்தக்க கலாசார செல்வாக்கைக் கொண்டுள்ளன.

ஓயோவை உலகின் மிக இளம் ஆட்சியிலிருக்கும் மன்னர் என கின்னஸ் உலக சாதனை நிறுவனம் பட்டியலிட்டிருந்தது. இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களை அவர் ஆட்சி செய்தார். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்ட டோரோ ராஜ்ஜியத்தின் 13-வது மன்னர் இவர்.

By admin