• Tue. Jun 2nd, 2026

24×7 Live News

Apdin News

கோலி அடித்த பந்தை சுப்மன் கில் பிடித்த 16வது ஓவரில் நடந்தது என்ன? இது பேசுபொருளானது ஏன்?

Byadmin

Jun 2, 2026


ஷுப்மன் கில், விராட் கோலி, ஐபிஎல் 2026

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக விராட் கோலி வெளிப்படுத்திய பிரம்மாண்டமான பேட்டிங் ஆட்டம், தற்போது அனைவராலும் பெரிதும் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஞாயிற்றுக்கிழமையன்று (மே 31) நடைபெற்ற 2026 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியைத் தோற்கடித்து தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இப்போட்டியில், ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி, தான் ஒரு ‘சேஸ் மாஸ்டர்’ என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். 42 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் குவித்து, அவர் தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

விராட் கோலிக்கு ‘ஆட்ட நாயகன்’ விருதைப் பெற்றுத் தந்த இந்த சிறப்பான ஆட்டத்துடன் சேர்த்து, மற்றொரு காரணத்திற்காகவும் அவர் தற்போது செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். களத்தில் அவருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கும் இடையே ஏற்பட்ட வாதம்தான் அதற்கு காரணம்.

பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, இருபது ஓவர்களில் மொத்தம் 155 ரன்களைச் சேர்த்திருந்தது. அடுத்து ஆடிய ஆர்சிபி அணியின் ​​16-வது ஓவரில் களத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியது.

விராட் கோலியும் சுப்மன் கில்லும் பரஸ்பரம் பேசிக்கொண்டதை கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் நேரலையில் பார்த்தார்கள்.

By admin