• Thu. Jul 30th, 2026

24×7 Live News

Apdin News

’கோழிகளுக்கு வலுக்கட்டாய தீவனத்தால் செயற்கை எடை’ – கறிக்கோழி விற்பனையை நிறுத்த உள்ளதாக அறிவிப்பு ஏன்?

Byadmin

Jul 30, 2026


’அதிக எடைக்காக கோழிகளுக்கு வலுக்கட்டாய தீவனம் -  கறிக்கோழி விற்பனையை நிறுத்த உள்ளதாக வணிகர்கள் அறிவிப்பு ஏன்?

பட மூலாதாரம், Getty Images

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

‘வரும் 31-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது’ என, கோழி வணிகர்கள் அறிவித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழ்நாட்டில் கோழி இறைச்சி என்பது மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது.

‘தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 11 முதல் 12 லட்சம் பிராய்லர் கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 40 சதவிகிதத்துக்கும் மேல் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன’ என, தமிழ்நாடு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையில் கறிக்கோழிகளை வளர்க்கின்றனர். இதில், கோழிக் குஞ்சுகள் மற்றும் தீவனங்களை நிறுவனங்கள் வழங்க, விவசாயிகள் அவற்றை வளர்க்கின்றனர்.

“கோழிகளை வளர்த்துக் கொடுப்பதற்காக விவசாயிகளுக்கு கூலி கொடுக்கப்படுகிறது” என்கிறார், கோழி வணிகர்களின் கூட்டமைப்பின் தலைவர் துரைராஜ்.

By admin