• Mon. Jun 29th, 2026

24×7 Live News

Apdin News

சத்தீஸ்கர்: மதுவில் விஷம் கலந்து 8 பேர் கொலை – குற்றம் சாட்டப்பட்டவர் கூறிய காரணங்கள் என்ன?

Byadmin

Jun 29, 2026


காவல்துறை, மூடநம்பிக்கை, சத்தீஸ்கர்,கொலை, மது

பட மூலாதாரம், Alok Putul

படக்குறிப்பு, குற்றஞ்சாட்டப்பட்ட ராம்ஸஹாய் ஜெய்ஸ்வால் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை கூறுகிறது

    • எழுதியவர், அலோக் புதுல்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சத்தீஸ்கரின் பலோடா பஜார்-பாடாபாரா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பகை மற்றும் தனிப்பட்ட விரோதங்களின் காரணமாக, சிலருக்கு விஷம் கலந்த மது கொடுத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில், பல மாத இடைவெளியில் உயிரிழந்த பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இருப்பினும், புதையல் ஒன்றைக் கண்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே குற்றம் சாட்டப்பட்டவர் இந்தக் கொலைகளைச் செய்ததாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இந்தத் தகவலைப் போலீஸார் உறுதிப்படுத்தவில்லை.

இதுவரை நடத்திய விசாரணையில் புதையலுக்காக கொலை செய்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் அத்தகைய வாக்குமூலம் எதையும் அளிக்கவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவரின் மகன், தனது தந்தை வேண்டுமென்றே இதில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நிரபராதி என்றும் கூறுகிறார்.

By admin