9
இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்ச்சிகளை வழங்கி டிஜிட்டல் தள ரசிகர்களின் விருப்பத்திற்குரிய டிஜிட்டல் தளமாக திகழும் சன் நெக்ஸ்ட் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ எனும் புது வடிவத்திலான பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
‘ஜாலி ஓ ஜிம்கானா’ எனும் நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பங்கு பற்றி அவர்களின் மறுபக்கத்தை இயல்பான உரையாடல்கள் மூலமாகவும்.. கலகலப்பான விளையாட்டுகள், சுவராசியமான செயல்பாடுகள் மற்றும் வேடிக்கையான கேலி பேச்சுகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை திரையுலக பிரபலங்களின் காணாத புதிய பரிணாமத்தை இளம் தலைமுறை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாகவும் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதனை நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரபலமான ஜெகன் கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் – நடிகர்கள் ரவி மோகன்- துருவ் விக்ரம் – மிர்ச்சி சிவா – மகத் ராகவேந்திரா- வைபவ் – அஸ்வின் – உள்ளிட்ட பலர் பங்கு பற்றி இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சிக்கு ‘ஓபிஸ் கானா’ எனும் இசைக் குழுவும் தன் பங்களிப்பை வழங்கி உள்ளது.