• Sun. Apr 26th, 2026

24×7 Live News

Apdin News

ஹோர்மூஸ் நீரிணை: கடலுக்கு அடியில் கண்ணிவெடி எப்படி வைக்கப்படும்? இரான் வைத்த வெடிகளை அகற்றுவது ஏன் கடினம்?

Byadmin

Apr 24, 2026


ஹோர்மூஸ் நீரிணை வழியாக உலகின் மொத்த எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி  விநியோகத்தில் 20 சதவீதப் பகுதி கடந்து செல்கிறது.

பட மூலாதாரம், IAN FORSYTH/GETTY IMAGES

படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணை வழியாக உலகின் மொத்த எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி விநியோகத்தில் 20 சதவீதம் கடந்து செல்கிறது.

இரான் போரில் கடலுக்கடியில் பதிக்கப்படும் கண்ணிவெடிகள் குறித்த விவகாரம் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணையில் ஏதேனும் ஒரு இரானியப் படகு கண்ணிவெடிகளைப் பதிப்பதைப் பார்த்தால், அதை உடனடியாக சுட்டு அழிக்குமாறு அமெரிக்கக் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமையன்று தெரிவித்தார்.

உலகின் எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி விநியோகத்தில் 20 சதவீதப் பங்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே கடந்து செல்கிறது. தற்போது இரான் அதனை ஏறக்குறைய மூடிவிட்டது.

அதே சமயம் தனது ராணுவ நடவடிக்கையின் மூலம் இந்த நீரிணையை மீண்டும் திறக்க போவது குறித்தும், அங்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கண்ணிவெடிகளை அகற்ற போவதாகவும் அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.

கடலில் பதிக்கப்படும் கண்ணிவெடிகள் என்றால் என்ன, அவை எப்படிச் செயல்படுகின்றன மற்றும் அவற்றை அகற்றுவது ஏன் மிகவும் கடினமான காரியம்?

By admin