• Sun. Jul 19th, 2026

24×7 Live News

Apdin News

சப்பாணி முதல் மலைச்சாமி வரை – பாரதிராஜா படைப்பில் காலம் கடந்து நிற்கும் கதாபாத்திரங்கள்

Byadmin

Jul 18, 2026


கமல்ஹாசன்

பட மூலாதாரம், 4KCinemas/Youtube

படக்குறிப்பு, கமல்ஹாசன், 16 வயதினிலே திரைப்படத்தில் சப்பாணியாக நடித்திருந்தார்

    • எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சமீபத்தில் மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் தனித்தன்மை வாய்ந்தவை.

கதாநாயகன், கதாநாயகி மட்டுமல்ல, எதிர்மறை கேரக்டர்கள், சின்ன, சின்ன ரோல்களில்கூட அவர் அதிகம் கவனம் செலுத்தியிருப்பார்.

பாரதிராஜா படங்களில் இடம்பெற்று, இன்றும் நம் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சில கதாபாத்திரங்களை இங்கு பார்ப்போம்.

சப்பாணி (16 வயதினிலே)

பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே (1977) படத்தில் கமல்ஹாசன் சப்பாணி கதாபாத்திரத்தில் நடித்தார்.

சிறு வயதில் தனது கிராமத்தில் பார்த்த ஒரு வெள்ளந்தி மனிதர் ஏற்படுத்திய தாக்கத்தால் அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியதாக பாரதிராஜா கூறியுள்ளார்.

By admin