• Sat. Jul 18th, 2026

24×7 Live News

Apdin News

டிரம்பின் பதிவுகளை விரைவாக பெற ரூ. 1 கோடி கட்டணம்: ட்ரூத் சோசியல் நிறுவனம் முடிவு

Byadmin

Jul 18, 2026


ட்ரூத் சோஷியல் பதிவுகளை விரைவாக பெற கட்டணம்:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதிவுகளை விரைவாக பெற ஒரு கோடி ரூபாய் வரை வசூலிக்க அவரின் ட்ரூத் சோசியல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக விதிமுறைகளை மீறியதாக எக்ஸ் தளம் (அப்போது டுவிட்டர்) டொனால்டு டிரம்பை பிளாக் செய்தது. இதனால் அவர் சொந்தமாக ட்ரூத் சோசியல் என்ற செயலியை உருவாக்கி அதில் செய்திகளை பதிவிட்டு வருகிறார்.

அவர் வெளியிடும் சில பதிவுகள் அமெரிக்கா மற்றும் உலகளவில் உள்ள பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, மற்ற நாடுகள் மீது விதித்த வரிகளை நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு செய்தது.

அப்போது வர்த்தகத்தில் பங்குகளை வாங்குவதற்கு சிறந்த நேரம் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால் அந்த நேரத்தில் பங்குகளை வாங்கியவர்கள் மிகப்பெரிய அளவில் பயனடைந்தனர்.

பின்னர், ஈரான் உடன் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஈரானுடன் மிகவும் நல்ல மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் நடந்தன என்று பதிவிட்டார்.

இதனால் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்தன. மற்ற நிறுவனங்களின் பங்குகள் வளர்ச்சியை நோக்கி சென்றன.

இதனால் டிரம்பின் ஒவ்வொரு பதிவும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு மிகமிக முக்கியமானதாக அமைகிறது.

அவருடைய பதிவு மில்லி விநாடிகளில் கிடைத்தால், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பங்கு சந்தையில் சிறப்பாக செயல்பட முடியும். இல்லையென்றால் பணத்தை இலக்க நேரிடும்.

ட்ரூத் சோசியல் மீடியாவில் இருந்து மற்றவர்களுக்கு டிரம்பின் பதிவை விரைவாக ட்ரூத் ஏபிஐ தரவு சேவை வழங்கி வருகிகிறது.

ட்ரூத் ஏபிஐ மூலம் டிரம்பின் பதிவை மில்லி விநாடிகளில் பெற முடியும். இதனால் பெரும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இந்த ட்ரூத் ஏபிஐ வாங்குவது அவசியமாகிறது.

இதனால் இதற்கு மாதத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை வசூலிக்க டிரம்ப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும் மூன்றாண்டுத் திட்டத்தில் இணைந்தால், மாதத்திற்கு சுமார் ரூ.60 லட்சம் வரை தள்ளுபடி எனவும் முன்மொழியப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

By admin