• Sat. Jul 18th, 2026

24×7 Live News

Apdin News

வங்கி லாக்கரில் நகை வைத்தவர் இறந்துவிட்டால் அது யாருக்கு கிடைக்கும்? வழிமுறை என்ன?

Byadmin

Jul 18, 2026


வங்கி லாக்கரில் நகை வைத்தவர் இறந்துவிட்டால் அது யாருக்கு கிடைக்கும்? வழிமுறை என்ன?

பட மூலாதாரம், Getty Images

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கோவையில், மறைந்த மனைவி வங்கி லாக்கரில் வைத்திருந்ததாகக் கூறப்படும் 80 சவரன் நகை தனது அனுமதியின்றி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் புகார் அளித்துள்ளார்.

ஆனால், அந்தப் பெயரில் லாக்கரே இல்லை என வங்கியும், ஆதாரம் இல்லை என காவல்துறையும் கூறுகின்றன. இறந்த அவரது மனைவியின் உறவினர்களும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் வங்கி லாக்கர்களில் நகை, பத்திரங்கள் போன்ற பொருட்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் ஒருவர் இறந்துவிட்டால், ‘அந்த லாக்கரும் அதிலுள்ள பொருட்களும் யாருக்குச் சொந்தமாகும்?’ என்ற கேள்வியை மக்களிடையே எழுப்பியுள்ளது. அதுகுறித்து இங்கு விரிவாகக் காண்போம்.

மனைவியின் நகையைக் கேட்டு கணவர் புகார்

கோவை சுல்தான்பேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் (72), தனது மறைந்த மனைவி சாந்தினி பாரத ஸ்டேட் வங்கியின் போத்தனூர் கிளை லாக்கரில் வைத்திருந்ததாகக் கூறிய 80 சவரன் நகையை, சட்டபூர்வ வாரிசான தன்னிடம் ஒப்படைக்காமல் அவரது உறவினர்களுக்கு வங்கி நிர்வாகம் வழங்கிவிட்டதாக ஜூலை 16 அன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்ற சாந்தினி, சிறுநீரக பாதிப்பால் 2024 ஆகஸ்ட் 3 அன்று இறந்தார். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இறப்பதற்கு முன்பு, பணம், நகை மற்றும் சொத்துகள் எங்கு உள்ளன என்பதை சாந்தினி கையெழுத்திட்டு வழங்கியதாக முருகேசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

By admin