• Tue. Nov 10th, 2026

24×7 Live News

Apdin News

சப்பானியா: ‘பெண்கள் வெட்கத்தையும் மானத்தையும் இழந்தனர்’ – கொடிய பஞ்சம் குறித்து வரலாற்றில் என்ன பதிவாகியுள்ளது?

Byadmin

Nov 10, 2026


சப்பானியா பஞ்சம், 1899–1900 பஞ்சம், குஜராத்,  20 லட்சம் உயிரிழப்புகள், பிரிட்டிஷ் ஆட்சி, இந்திய வரலாறு

படக்குறிப்பு, 1900-ஆம் ஆண்டு சப்பானியா பஞ்சத்தின் போது நிலவிய நிலைமைகளைக் காட்டும் புகைப்படம்.

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் இடம்பெறும் சில விவரங்கள் வாசகர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.)

“காலு இருந்த திசையை நோக்கி வீசிய காற்றும், அந்தப் பருவத்தின் கடுமையும், ‘சாப்பிடு! சாப்பிடு!’ என்று கூச்சலிடுவது போல் இருந்தது.”

“பறவைகள்கூட பசி, தாகத்தால் மூச்சுத் திணறின. சித்திரை மாதத்தின் காற்றும் வெப்ப அலைகளும் முற்றிலும் வறண்டு, சுட்டெரித்தன. சுற்றிலும் இருந்த கருகிய நிலம், காலுவைத் தன் எதிரியாகக் கருதி, அவனது கால்களைக் கட்டிப்போட முயல்வது போலத் தோன்றியது.”

வைக்கோலையும் அணிகலன்களையும் வைத்து எப்படியோ இரண்டு மாதங்களைக் கடத்திய காலு, “பன்னிரண்டு மாதங்களாகத் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும் மழை, ஆனி மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களிலாவது திரும்பி வராதா?” என்று கேட்டான்.

“மழை பெய்துவிட்டால் எப்படியாவது அடுத்த பருவத்தைச் சமாளித்துவிடலாம். மரங்களின் இளந்தளிர்களையும் காட்டில் கிடைக்கும் காய்கறிகளையும் சாப்பிட்டு உயிர் பிழைத்துவிடலாம். எப்படியாவது மழை பெய்தால் போதும்” என்றான் காலு.



By admin