2
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான சமந்தா தயாரித்து கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் சமந்தா கௌதமி ஆனந்த் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சமந்தா – ராஜ் நெடிமொறு – ஹமாங்க் ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 19 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் நடிகைகள் கௌதமி மற்றும் சமந்தா ஆகியோர் பங்குபற்றினர்.
படத்தைப் பற்றி நடிகை கௌதமி பேசுகையில் ”இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இப்படத்தின் குழுவில் உள்ள மனிதர்கள் தான் காரணம். சமந்தாவும்இ இயக்குநரும் மிகவும் வலிமையானவர்கள். கண்ணியமானவர்கள். தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். பலர் இந்தப் படத்தை வுமன் பவர் என்று கூறுகிறார்கள். ஆனால் எம்முடைய பார்வையில் இந்த படம் டேலண்ட் பவர். படத்தின் வெற்றிக்கு பாலினம் ஒரு காரணம் அல்ல. அதில் பணியாற்றியவர்களின் திறமையும்இ உழைப்பும் தான் காரணம். இந்த படம் அழகான மனதைத் தொடும் படைப்பு என்பதால் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.