• Wed. May 6th, 2026

24×7 Live News

Apdin News

சவுத் ஹரோ றோக்சித் வட்டாரத்தில் தமிழ்ப் பிரதிநிதி இல்லாதிருப்பது ஏன்? இந்திரஜித் குமாரசாமி வெற்றிபெறுவாரா? 

Byadmin

May 6, 2026


பிரித்தானியாவில் நாளை நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தலில் இலண்டன்  சவுத் ஹரோ Roxeth வட்டாரத்தில் தமிழர் சார்பாக  நிதி ஆலோசகர் இந்திரஜித் குமாரசாமி Conservative கட்சியில் போட்டியிடுகின்றார்.

இலண்டனில் அதிகூடிய தமிழர்கள் வசிக்கும் வட்டாரமான  சவுத் ஹரோ Roxeth வட்டாரத்தில் இதுவரை ஹரோ மன்றத்திற்கு (Harrow Council) தமிழ் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன? பெருமளவு வர்த்தக நிறுவனங்களை தமிழர்களே நடாத்துகின்றனர். பாரிஸில் உள்ள லா சப்பல் நகர் போன்று தமிழர்களின் அதிகூடிய வர்த்தக முயற்சிகள் செறிந்து காணப்படும் நகராக South Harrow இன்று அமைந்துள்ளது. சுமார் 800 க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசிப்பதாக தகவல்கள் உள்ளன.

இந்தமுறை இந்திரஜித் குமாரசாமி Conservative கட்சியில் போட்டியிடுவதால் தமிழர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எம் இனம் சார்ந்து எமது மக்களுக்காகவும் வர்த்தகர்களுக்காகவும் பாடசாலை மாணவர்களுக்காகவும் இந்த வட்டாரத்தில் தமிழ்ப் பிரதிநிதியை Harrow Council க்கு தெரிவுசெய்ய முடியும்.

கடந்த தேர்தலில் Conservative கட்சியினால் வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி  Harrow Council க்கு உட்பட்ட வர்த்தகத் தொகுதியில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடங்களில் முதல் ஒரு மணிநேரம் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இதனை South Harrow தமிழ் வர்த்தகர்கள் மகிழ்வுடன் இந்திரஜித் குமாரசாமி அவர்களிடம் தெரிவித்து வருகின்றனர். இது Conservative கட்சியினால் வர்த்தகர்களுக்கு துணைநிற்கும் கொள்கையைப் பிரதிபலிப்பதை காட்டுகின்றது.

KY Property Investment நிறுவனத்தின் நிதி மற்றும் திட்டமிடல் ஆலோசகர் இந்திரஜித் குமாரசாமி அவர்களின் தெரிவானது அப்பிரதேசத்தில் வாழும் தமிழர்களுக்கும் தமிழ் வர்த்தகர்களுக்கு பலம் சேர்க்கும்.

நாளை மே 7 ஆம் திகதி மறக்காமல் தமிழ் பிரதிநிதிக்காக வாக்களிப்போம்.

-சுப்ரம் சுரேஷ்-

By admin