• Fri. Sep 11th, 2026

24×7 Live News

Apdin News

சாலமன் பாப்பையா காலமானார் – அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி

Byadmin

Sep 11, 2026


தமிழறிஞர் சாலமன் பாப்பையா மதுரையில் காலமானார்

பட மூலாதாரம், SolomonPappaiah/FB

படக்குறிப்பு, தமிழறிஞர் சாலமன் பாப்பையா மதுரையில் காலமானார்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.

தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மதுரையில் காலமானார். அவருக்கு வயது 90.

அவரது உடல், மதுரை ஆரப்பாளையம் அடுத்துள்ள ஞானஒளிவுபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாளை பிற்பகல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட இருப்பதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் 1936ஆம் ஆண்டு சாலமன் பாப்பையா பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

By admin