• Fri. Oct 2nd, 2026

24×7 Live News

Apdin News

‘சிக்மா’ படத்தின் எக்சன் காட்சிகள் பேசப்படும் – சந்தீப் கிஷன்

Byadmin

Oct 2, 2026


‘சிக்மா திரைப்படத்தில் எக்சன் காட்சிகள் ரசிகர்களிடத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பேசு பொருளாக உருவாகும்’ என அப்படத்தின் நாயகனான சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், சம்பத்ராஜ் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். கொமர்ஷல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் இரண்டாம் திகதி அதாவது நாளை முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் பிரத்யேக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் நடிகர் சந்தீப் கிஷன் பேசுகையில், ” படத்தின் கதையை இயக்குநர் ஜேசன் சஞ்சய் இரண்டரை மணி நேரம் முழுவதுமாக விவரித்தார்.

அந்த தருணங்களில் அவருடைய கதை சொல்லும் பாணி நேர்த்தியாக இருந்தது. கதை சொல்வதில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும் வெளிப்படுத்தியது. இதுவே அவர் நடிப்பில் விட இயக்கத்தில் தீவிர கவனம் செலுத்துவதை எம்மால் உணர முடிந்தது.

குறிப்பாக இப்படத்தில் இடைவேளை காட்சி மற்றும் அதற்கு பின்னரான இரண்டாம் பாதியில் அவர் விவரித்திருக்கும் திரைக்கதை புதிதாக இருக்கும். அதிலும் குறிப்பாக எக்சன் காட்சிகள் ரசிகர்களிடம் பேசப்படும்” என்றார்.

The post ‘சிக்மா’ படத்தின் எக்சன் காட்சிகள் பேசப்படும் – சந்தீப் கிஷன் appeared first on Vanakkam London.

By admin