• Thu. Oct 1st, 2026

24×7 Live News

Apdin News

கிறிஸ்டா பைக்: இருமுறை மரண ஊசி செலுத்தியும் மரண தண்டனை கைதி உயிருடன் இருந்தது எப்படி?

Byadmin

Oct 1, 2026


கிறிஸ்டா பைக்

    • எழுதியவர், ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்டு
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்காவில் கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்டா பைக்குக்கு, டென்னசி மாகாண அதிகாரிகள் மரண ஊசி மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற முயன்றது தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு “உயிர் காக்கும் சிகிச்சைகள்” அளிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே பெரும் சட்டப் போராட்டத்துக்கு உள்ளான பைக்கின் மரண தண்டனை நிறைவேற்ற முயற்சி, தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

என்ன தவறு நடந்தது, அடுத்து என்ன நடக்கப் போகிறது, மேலும் மரண தண்டனைக்கு எதிரானவர்கள் எழுப்பும் முக்கியமான மற்றொரு கேள்வியான — மரண தண்டனை திட்டமிட்டபடி நிறைவேறாதபோது கைதிக்கு ஏற்படும் வேதனை — ஆகியவை அவற்றில் அடங்கும்.

என்ன நடந்தது?

கொலீன் ஸ்லெம்மர்

படக்குறிப்பு, கொலீன் ஸ்லெம்மர்

50 வயதான பைக்குக்கு, 19 வயதான கொலீன் ஸ்லெம்மரை கொலை செய்த குற்றத்துக்காக 1996ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவரது காதலராக இருந்த டாடரில் ஷிப்புடன் இணைந்து இந்தத் தாக்குதலை அவர் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (செப்டம்பர் 30) மாலை அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக நீண்ட சட்டப் போராட்டம் நடைபெற்ற நிலையில், கடைசி நேரத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு அனுமதி அளித்தது.

By admin