• Wed. Nov 4th, 2026

24×7 Live News

Apdin News

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு – உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

Byadmin

Nov 4, 2026


சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு புதிய நிர்வாகக் குழு

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி அதனை சீரமைப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நிர்வாகக் குழு ஒன்றை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு புதன்கிழமையன்று (நவம்பர் 4) உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

முன்னதாக, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள், டி.ஆர்.ரமேஷ் உள்பட நான்கு பேர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை தரிசனம் தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறையின் அரசாணையை எதிர்த்தும் கோவிலின் பழமையான கட்டுமானங்கள் மற்றும் வருமானக் கணக்குகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதியன்று நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில், ‘கடந்த 12 ஆண்டுகளாக கோவிலுக்குக் கிடைத்த வருமானம் குறித்து முழுமையான மற்றும் உண்மையான கணக்குகளை பொது தீட்சிதர்கள் சமர்ப்பிக்கவில்லை’ எனக் கூறப்பட்டுள்ளது.



By admin