• Wed. Nov 4th, 2026

24×7 Live News

Apdin News

பதப்படுத்தப்படாத பால் குடிப்பது பாதுகாப்பானதா? நிபுணர்கள் சொல்வது என்ன?

Byadmin

Nov 4, 2026


பதப்படுத்தப்படாத பால் குடிப்பது பாதுகாப்பானதா? அறிவியல் உண்மை என்ன?

பதப்படுத்தப்படாத பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் பால் பொருள்களால் ஏற்படும் ஒவ்வாமையைத் தடுப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது வரை அனைத்தையும் செய்யக் கூடியது என்று கூறப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில், இதுகுறித்த கூகுள் தேடல்கள் பிரிட்டன், அமெரிக்காவில் கணிசமாக அதிகரித்துள்ளன. இன்ஸ்டாகிராமில் பதப்படுத்தப்படாத பால் தொடர்பான சுமார் 2.6 லட்சம் பதிவுகள் உள்ளன. மேலும், அதிகம் அறியப்பட்ட சமூக ஊடக பிரபலங்கள் பலரும் அதன் நன்மைகளைப் பிரபலப்படுத்தி வருகின்றனர்.

அப்படியென்றால், பதப்படுத்தப்படாத பால் மீது அனைவருக்கும் இவ்வளவு ஆர்வம் ஏற்பட்டிருப்பது ஏன்?

பதப்படுத்தப்படாத பால் என்றால் என்ன? மக்கள் அதைக் குடிப்பது ஏன்?

பிரிட்டனில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான பால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொல்வதற்கும், அதன் சேமிப்புக் காலத்தை நீட்டிப்பதற்கும் வெப்பமூட்டிப் பதப்படுத்தப்படுகிறது.

பதப்படுத்தப்படாத பால், கிரீம் ஆகியவை மாடு, செம்மறியாடு, ஆடு ஆகியவற்றில் இருந்து பெறப்படுகின்றன. இவை எந்தவிதப் பதப்படுத்தும் முறைக்கும் உட்படுத்தப்படாமல், விலங்குகளிடம் இருந்து நேரடியாக பாட்டில்களில் நிரப்பப்படுகின்றன.



By admin