• Thu. Jul 2nd, 2026

24×7 Live News

Apdin News

சிந்து நதிநீர் குறித்து பாகிஸ்தான் அமைச்சர் கூறிய கருத்து – இந்தியாவின் நிலைப்பாடு சர்ச்சையாவது ஏன்?

Byadmin

Jul 2, 2026


நதி, பாகிஸ்தான், நீர் உரிமை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக நிறுத்தி வைத்திருந்தது (கோப்புப் படம்)

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியாவுடன் எந்தவிதமான ‘மோதலையோ’ அல்லது ‘சர்ச்சையையோ’ பாகிஸ்தான் நாடவில்லை என்றாலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் நாட்டின் நீர் வளங்களைத் தடுத்து வைக்கும் எந்தவொரு முயற்சியும் ‘போர் நடவடிக்கையாக’ கருதப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றிய பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ‘இந்தியா ஒருதலைப்பட்சமாக ரத்து செய்வதற்கு எந்தவொரு அடிப்படையும் இல்லை, சர்வதேச சட்டத்திலும் இதற்கு இடமில்லை’ என்று கூறினார்.

இஷாக் தாரின் இந்தப் புதிய அறிக்கை குறித்து இந்தியா இதுவரை எந்தவொரு எதிர்வினையையும் தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று குற்றம் சாட்டிய இந்திய அரசு, அதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையை நிராகரித்த பாகிஸ்தான், சர்வதேச நடுவர் நீதிமன்றத்தை நாடியது.

By admin