• Fri. Jul 3rd, 2026

24×7 Live News

Apdin News

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி இன்னும் முடியவில்லையா? எதிர்காலத்தில் எப்படி இருப்பார்கள்?

Byadmin

Jul 2, 2026


நீண்ட கருமையான முடியைக் கொண்ட ஒரு பெண்ணின் படம். இது கணினியில் உருவாக்கப்பட்டது. 
அவரது முகத்தின் சில பகுதிகள், படத்திலிருந்து வெளியே நீண்டுள்ள 3D பெட்டிகளில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Andriy Onufriyenko/Jackyenjoyphotography via Getty Images

    • எழுதியவர், கேத்தரின் ஹீத்வுட்
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மனிதர்கள் இன்னும் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்களா?

நமது எதிர்கால வடிவங்கள் சிறியதாகவோ அல்லது உயரமானதாகவோ, வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டதாகவோ, அல்லது குறிப்பிட்ட தேவைக்கேற்ப மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்டதாகவோ கூட இருக்க முடியுமா?

நாகரிகம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், நமது இனத்தை ஒரு காலத்தில் வடிவமைத்த நோய், பஞ்சம் மற்றும் கடுமையான சுற்றுச்சூழல் நிலைமைகள் போன்ற பல இயற்கை அழுத்தங்கள் நவீன மருத்துவம், சுகாதாரம் மற்றும் உணவுக்கான அணுகல் ஆகியவற்றால் குறைக்கப்பட்டுள்ளன.

ஆனால், பிரிட்டனில் உள்ள ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தின் மானிடவியலாளரும் பரிணாம மரபியல் நிபுணருமான ஜேசன் ஹாட்ஜ்சன், பரிணாம வளர்ச்சி இன்று “சந்தேகத்திற்கு இடமின்றி” தொடர்கிறது என்று கூறுகிறார்.

சில மக்கள்குழுக்களில் குறிப்பிட்ட மரபணுக்கள் அதிகமாகப் பரவி வருவதன் மூலம் இதை நாம் அறிய முடிகிறது. ஆனால், இந்த மாற்றங்கள் பல தலைமுறைகள் கடந்து நிகழ்வதால், ”ஒருவரின் வாழ்நாளுக்குள் பரிணாம வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்களை நேரடியாகக் காண முடியாது” என்கிறார் ஜேசன் ஹாட்ஜ்சன்.

By admin