• Wed. Sep 2nd, 2026

24×7 Live News

Apdin News

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

Byadmin

Sep 2, 2026


சிந்து நதி நீர் ஒப்பந்தம் முழுமையாக நடைமுறையில் இருப்பதாகவும், அதை முடிவுக்குக் கொண்டுவரவோ அல்லது நிறுத்தி வைக்கவோ இந்தியாவுக்கு எந்த நியாயமான காரணமும் இல்லை என்றும் நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா கடந்த ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடை நிறுத்தியிருந்தது

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நெதர்லாந்தின் தி ஹேக் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட நிரந்தர நடுவர் நீதிமன்றம் (PCA), இந்தியா பாகிஸ்தானுடன் செய்துள்ள நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியா கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் நீர்மின் நிலையம் தொடர்பான தனது பணிகளை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

சர்வதேச சமூகத்திற்கு மாற்று வழக்குத் தீர்வு சேவைகளை வழங்கும் அரசுகளுக்கு இடையிலான அமைப்பாக பிசிஏ செயல்படுகிறது. நடுவர் தீர்ப்பு மற்றும் சமரச நடவடிக்கைகளிலும், விசாரணை ஆணையங்களாலும் பிசிஏ-வின் விதிமுறைகளைப் பயன்படுத்த முடியும். இத்தகைய சூழ்நிலையில், பிசிஏ-வின் இந்த முடிவை இந்தியாவுக்கு சாதகமானதாகக் கருத முடியாது.

ஆனால், நாடுகள் சர்வதேச அமைப்புகளின் முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமான வகையில் தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொள்கின்றன என்றும், தற்போதைய காலகட்டத்தில் இதுபோன்ற அமைப்புகளின் பொருத்தம் குறித்துப் பல கேள்விகள் எழுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் விவசாய நிலங்களில் 80 சதவிகித்திற்கு நீர் விநியோகத்தை உறுதி செய்யும் ஒப்பந்தத்தை இந்தியா கடந்த ஆண்டு நிறுத்தி வைத்தது. காஷ்மீரில் உள்ள சுற்றுலாத் தலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரில் இருவர் பாகிஸ்தான் நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

By admin