• Sun. Oct 4th, 2026

24×7 Live News

Apdin News

சீனா ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

Byadmin

Oct 4, 2026


சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார்.

இதில் சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறவுள்ள அரையிறுதியில் ஜோகோவிச், ரஷியாவின் மெத்வதேவ் உடன் மோதவுள்ளார்.

By admin