• Sun. Oct 4th, 2026

24×7 Live News

Apdin News

நவம்பரில் வெளியாகும் தனுஷின் ‘ஓம்’

Byadmin

Oct 4, 2026


இந்திய சினிமாவின் தனித்துவமான நடிப்பதற்காக அடையாளப்படுத்தப்படும் தென்னிந்திய நட்சத்திர முகங்களான தனுஷ்- மம்மூட்டி ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ஓம்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘அமரன்’ படத்தை இயக்கி, பான் இந்திய அளவிலான கவனத்தை தன் மீது திருப்பிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசுருதீன் ஷா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சாய் அபயங்கர் இசையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

அக்டோபர் 16ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படம் அதனைத் தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்தின் வெளியீட்டிற்காக தங்களுடைய திரைப்பட வெளியீட்டை ஒத்திவைத்தது.

இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் இருபதாம் திகதி உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் தனுசும், மம்முட்டியும் கைகளில் துப்பாக்கியை ஏந்தி தோன்றுவது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது.

The post நவம்பரில் வெளியாகும் தனுஷின் ‘ஓம்’ appeared first on Vanakkam London.

By admin