• Tue. Jun 9th, 2026

24×7 Live News

Apdin News

சீனா – வட கொரியாவின் அன்பும் வெறுப்பும் கலந்த உறவின் வரலாறு

Byadmin

Jun 9, 2026


சீனத் தலைவர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, சீனத் தலைவர் ஷி ஜின்பிங்கின் வடகொரியப் பயணம், ஒரு தூதரக ஈர்ப்பு முயற்சி

    • எழுதியவர், லைக்னி பரோன்
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சீனத் தலைவர் ஷி ஜின்பிங் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஜூன் 8 -9 தேதிகளில் நடைபெறவுள்ள உச்சிமாநாடு குறித்து பெரிய எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

கடந்த மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஷி மேற்கொண்ட சந்திப்பு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான அவரது தனிப்பட்ட சந்திப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

இதற்கு அடுத்தபடியாக நேரடியாக வடகொரியா செல்வதன் மூலமும், அதை 2026 ஆம் ஆண்டின் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக மாற்றுவதன் மூலமும், ஷி தனது நிலையற்ற அண்டை நாடான வட கொரியாவுடனான கூட்டணியை வலியுறுத்துகிறார்.

இரு நாடுகளும் ”உத்தி ரீதியாக அவசியமான, ஆனால் உரசல்கள் அற்ற உறவாக இல்லாத” உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்று தென் கொரியாவை தளமாகக் கொண்ட செஜோங் நிறுவனத்தின் ஆராய்ச்சி ஆய்வாளர் யூன்-ஜூ சோய் கூறுகிறார்.

மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்ட பொதுத் தொடர்புகளுக்கு அப்பாற்பட்டு, இந்தச் சந்திப்பு சீனா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் தங்களது “ரத்தத்தால் பிணைக்கப்பட்ட” கூட்டாண்மையில் புதிய ஆற்றலைச் செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும்.

By admin