• Tue. Sep 1st, 2026

24×7 Live News

Apdin News

சுபாஷ் சந்திரா ரூ.22,000 கோடி கடனுக்கு ரூ.6.5 கோடி திருப்பி செலுத்தினால் போதுமா? என்சிஎல்டி புதிய உத்தரவு

Byadmin

Sep 1, 2026


சுபாஷ் சந்திரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுபாஷ் சந்திரா தனிநபர் திவால் வழக்கை எதிர்கொள்கிறார் (கோப்புப் படம்)

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT), தொழிலதிபர் சுபாஷ் சந்திரா தொடர்பான தனது முடிவில் இருந்து பின்வாங்குவது போல் தெரிகிறது.

சுபாஷ் சந்திராவின் கடன் தீர்வு திட்டம் தொடர்பாக ஒருமித்த முடிவுக்கு வருவதற்காக, தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) தற்போது 5 பேர் கொண்ட அமர்வை அமைத்துள்ளது.

₹22,000 கோடிக்கும் அதிகமான தொகையை மீட்டெடுப்பது தொடர்பான திவால் வழக்கு இது. இரண்டு பேர் கொண்ட அமர்வில் பெரும்பான்மை முடிவை எட்ட முடியாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) தற்போது தெரிவித்துள்ளது.

₹22,006.57 கோடி அளவிலான அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எதிராக ₹6.25 கோடி செலுத்த முன்வைக்கப்பட்ட சுபாஷ் சந்திராவின் முன்மொழிவுடன் இந்த விவகாரம் தொடர்புடையது.

சந்திராவின் பணம் செலுத்தும் திட்டத்தை அங்கீகரிப்பதில் பெரும்பான்மை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று என்.சி.எல்.டி தெரிவித்துள்ளது.

By admin