• Tue. Sep 1st, 2026

24×7 Live News

Apdin News

ரூ.5 மில்லியன் நன்கொடையில் கிளி. வைத்தியசாலையில் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சை விரிவாக்கத் திட்டம்!

Byadmin

Sep 1, 2026


கிளி மக்கள் அமைப்பின் (KILI PEOPLE) ஏற்பாட்டில், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் சுகநல நிலையத்தில் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சை விரிவாக்கத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இப்பாரிய திட்டத்துக்காக இலண்டனைச் சேர்ந்த வர்த்தகரான தங்கராஜா கலாமோகன் அவர்கள் 5 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் திகதி காலை 9:30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்தத் திட்டமானது, கிளிநொச்சி பொது வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச்சங்கத்தின் ஒருங்கிணைப்புடன், வைத்திய நிபுணர் பேராசிரியர் சிவலிங்கராஜா ரகுராமன் அவர்களின் தலைமையில் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்தகைய தலைமுறை காக்கும் பெரும் திட்டத்தை முன்னெடுத்து நடத்தும் பேராசிரியர் சிவலிங்கராஜா ரகுராமன் அவர்களுக்கும், அதற்குப் பெருங்கொடை வழங்கி ஆதரவளித்த இலண்டன் வர்த்தகர் தங்கராஜா கலாமோகன் அவர்களுக்கும் கிளி மக்கள் அமைப்பு தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

ரூ.5 மில்லியன் நன்கொடையில் கிளி. பொது வைத்தியசாலையில் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சை விரிவாக்கத் திட்டம்!

By admin