7
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுப்பர் லீக் கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் அணிகள் நிலையில் கடை நிலையில் உள்ள ரட்னம் கழகத்தை புளூ ஈக்ள்ஸ் கழகம் எதிர்த்தாடவுள்ளது.

இந்தப் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (09) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தனது முதல் மூன்று போட்டிகளிலும் கோல் காப்பளார்களின் கவனக் குறைவால் மோசமான தோல்விகளைத் தழுவிய ரட்னம் கழகம், நடப்பு பருவத்தில் முதலாவது வெற்றியை ஈட்ட கடுமையாக முயற்சிக்க வேண்டி வரும்.

ரட்னம் கழக வீரர்கள் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி வருகின்ற போதிலும் கோல் போடுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
எதிரணிகளுக்கு 15 கோல்களை விட்டுக்கொடுத்துள்ள ரட்னம் கழகம், இதுவரை ஒரு கொலைத் தானும் போடவில்லை.

மறுமுனையில் புளூ ஈக்ள்ஸ் கழகம் இன்றைய போட்டியில் பெரிய வெற்றியை ஈட்டி அணிகள் நிலையில் முன்னேற முயற்சிக்கவுள்ளது.
முதல் மூன்று கட்டங்களில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு வெற்றி தோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளைக் கொண்டுள்ள புளூ ஈக்ள்ஸ் கழகம் 4 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் 5ஆம் இடத்தில் இருக்கிறது.