• Wed. Jun 24th, 2026

24×7 Live News

Apdin News

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘தர்மன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Byadmin

Jun 24, 2026


சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் ‘தலைவர் 173’ என தற்காலிகமாக பெயரிடப்பட்ட திரைப்படத்திற்கு தற்போது ‘தர்மன்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.‌

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘தர்மன்’ திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன், யோகி பாபு, ராசி கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதுடன் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டு, படப்பிடிப்பையும் இன்று தொடங்கியுள்ளதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்நிகழ்வில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

ரஜினிகாந்த்- கமல்ஹாசன்- அஸ்வத் மாரிமுத்து- சிம்ரன்- யோகி பாபு -ஆர். மகேந்திரன் -அனிருத் -அன்பறீவ் கூட்டணியில் தயாராகும் ‘தர்மன்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும், ஆர்வமும் அதிகரித்திருக்கிறது. அதிலும் ஃபர்ஸ்ட் லுக்கில் ரஜினிகாந்த்தின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”டொக்டர் தர்மன் என்ற கதாபாத்திரத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் எட்டு பாடல்கள் இடம் பிடிக்கிறது. இதில் சுப்பர் ஸ்டாரின் ஓப்பனிங் சாங் மாஸாக இருக்கும். திரில்லர் வித் ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் தயாராகிறது” என்றார்.

 

By admin